ஒரு மாத கால வேதாந்த ஆழ்நிலைப் பயிற்சி முகாம்

ஒரு மாத கால வேதாந்த ஆழ்நிலைப் பயிற்சி முகாம்

ஒரு மாத கால வேதாந்த ஆழ்நிலைப் பயிற்சி முகாம்

மார்ச் 5 முதல் ஏப்ரல் 5, 2027 வரை

பூர்ண வித்யா அறக்கட்டளை, கோயம்புத்தூர்

மஹா சிவராத்திரி எனும் புனிதத் திருநாளை முன்னிட்டு, 2027 மார்ச் 6ஆம் தேதி, புனிதப் பிரார்த்தனைகள் மற்றும் வழிபாடுகளுடன் வேதாந்தத்தின் ‘காலத்தால் அழியாத’ ஞானத்தை நோக்கிய உங்கள் ஒரு மாத கால ஆன்மிகப் பயணத்தைத் தொடங்குங்கள். இப்புனிதத் தொடக்கம், ஒரு மாத கால வேதாந்தக் கல்வி, ஆழ்ந்த சிந்தனை மற்றும் ஆன்மிக வளர்ச்சிக்கான நல்வழியை அமைத்துத் தரும்.

பூர்ண வித்யா அறக்கட்டளை, அத்வைத வேதாந்தத்தின் காலத்தால் அழியாத ஏகத்துவ ஞான தரிசனத்தை ஆழ்ந்து கற்பதற்கும், மனனம் செய்து தியானிப்பதற்கும் வழிவகுக்கும் ஒரு மாதகால உண்டு உறைவிட வேதாந்தப் பாடநெறியில் பங்கேற்க ஆன்மிக நாட்டம் கொண்ட அனைவரையும் அன்புடன் அழைக்கிறது.

குருகுல மரபில், கற்றல் என்பது வகுப்பறையுடன் நின்றுவிடுவதில்லை. சாஸ்திரப் படிப்பு, பிரார்த்தனை, சத்சங்கம், சேவை, ஆழ்ந்த சிந்தனை மற்றும் ஆசிரமத்தின் எளிமையான அன்றாட வாழ்க்கை முறை ஆகிய அனைத்தும் ஒன்றிணைந்து, வேதாந்த உபதேசங்களை ஆழமாகப் புரிந்துகொண்டு, அவற்றை அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்பதற்கான உகந்த சூழலை உருவாக்குகின்றன.

இந்தப் பாடநெறி, அனுபவமிக்க ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடனும், சிந்தனை மற்றும் ஆழ்ந்த விசாரணைக்கு உரிய நேரத்துடனும், பாரம்பரியமான மற்றும் ஆதரவான சூழலில் வேதாந்தத்தைக் கற்றுக்கொள்வதற்கான ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.

வேதாந்தத்தின் ஆழமான பார்வையையும், அது அன்றாட வாழ்க்கையில் எவ்வாறு பொருந்துகிறது என்பதையும், புனித நூல்களின் படிப்பு, சமஸ்கிருதம், மந்திர உச்சாடனம், பிரார்த்தனை, சத்சங்கம், கலந்துரையாடல் மற்றும் தனிப்பட்ட சிந்தனை ஆகியவற்றின் மூலம் பங்கேற்பாளர்கள் ஆராய்ந்து அறிந்துகொள்கிறார்கள்.

பாடநெறியின் சிறப்பு அம்சங்கள்:-

  1. வேதாந்தக் கல்வி
  2. கீதா சார தாலாட்டு (Gita Sara Talattu)
  3. தத்துவ போதம் (Tattva Bodha)
  • கீதா சார தாலாட்டு (Gita Sara Talattu) என்பது பகவத் கீதையின் சாரத்தை, மனதிற்கு இதமளிக்கும் தாலாட்டு வடிவில் எடுத்துரைக்கும் ஓர் இனிய பக்திப் பாடலாகும்.
  • தத்துவ போதம் (Tattva Bodha) என்பது அத்வைத வேதாந்தத்தின் அடிப்படை நூலாகும். இது ஆன்மா, மனம், உடல் மற்றும் உண்மை நிலை குறித்த இன்றியமையாத கருத்துகளை அறிமுகப்படுத்தி, வேதாந்த உபதேசங்களை மேலும் ஆழமாகக் கற்பதற்கு ஆன்மிகத் தேடலில் ஈடுபடுவோரைத் தயார்படுத்துகிறது.
  • வேத மந்திரப் பாராயணம் மற்றும் பிரார்த்தனைகள்
  • சத்சங்கம் மற்றும் குழுக் கலந்துரையாடல்கள்

 

 

நமது விரிவுரையாளர்கள்:-

ஸ்வாமி சச்சின்மயானந்த சரஸ்வதி

ஸ்வாமி சச்சின்மயானந்த சரஸ்வதி அவர்கள், பூஜ்ய ஸ்ரீ ஸ்வாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் நேரடிச் சீடர் ஆவார். இவர் வேதாந்தம் மற்றும் சம்ஸ்கிருதம் ஆகியவற்றில் நீண்டகாலம் தங்கியிருந்து முறையாகக் கல்வி பயின்றவர். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பள்ளிகள், சமூக மையங்கள், ஆலயங்கள் மற்றும் பிற கல்வி நிலையங்களில் வேதாந்தத்தையும் சம்ஸ்கிருதத்தையும் கற்பித்து வருகிறார்.

ஸ்வாமினி கீதாசரானந்த சரஸ்வதி

ஆர்ஷ வித்யாலயத்தின் நிறுவனர் ஸ்வாமினி கீதாசரானந்த சரஸ்வதி அவர்கள், தமது மாணவர்களால் அன்புடன் “கீதாமா” என்று அழைக்கப்படுகிறார்.

2010 முதல் 2013 வரை, தென்னிந்தியாவின் ஆனைக்கட்டியில் அமைந்துள்ள குருகுலத்தில், தமது குருவான பூஜ்ய ஸ்ரீ ஸ்வாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பல்வேறு உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரம் ஆகிய பிரஸ்தானத்திரயம் எனப்படும் மூன்று முக்கிய வேதாந்த நூல்களையும், ஆதிசங்கரரின் பாஷ்யங்களையும் பயின்றார்.

துறவறம் மேற்கொள்வதற்கு முன்பு, கீதாமா அவர்கள் பெருமதிப்புப் பெற்ற ஒரு நிறுவனப் பயிற்றுநராகப் பணியாற்றினார். நிறுவனங்களின் இயக்குநர் குழு உறுப்பினர்கள் முதல் உற்பத்தித் தளத் தொழிலாளர்கள் வரை, அனைத்துப் பணிநிலைகளில் உள்ளவர்களுக்கும் மாற்றத்தை ஏற்படுத்தும் நூற்றுக்கணக்கான பயிற்சி நிகழ்ச்சிகளை அவர் நடத்தியுள்ளார்.

அவர் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

கோகேலம் லெட்சுமணன் ஜி (Kogelam Letchemanan Ji)

மலேசியாவைச் சேர்ந்த கோகேலம் லெட்சுமணன் ஜி அவர்கள், 2006ஆம் ஆண்டு மலேசியாவில் உள்ள யோக சேவாலயத்தில் (Yoga Sevalaya) யோகா மாஸ்டர் ஆண்டி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் தனது யோகப் பயணத்தைத் தொடங்கினார்.

2008ஆம் ஆண்டு யோகா கற்பிக்கத் தொடங்கிய அவர், 2011ஆம் ஆண்டு சென்னையில் உள்ள ஆசன ஆண்டியப்பன் யோகா மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (Asana Andiappan College of Yoga & Research Center) யோக சிகிச்சை மற்றும் இயற்கை மருத்துவங்களில் மேற்படிப்பைத் தொடர்ந்தார்.

தற்போது, மலேசியாவின் தைப்பிங்கில் இரண்டு யோகா பயிற்சி மையங்களைச் சொந்தமாக நிறுவி, அவற்றை நிர்வகித்து வருகிறார். அனைவரும் யோகப் பயிற்சியை எளிதில் கற்றுப் பயனடைய வேண்டும் என்பதும், உடல், மனம், ஆன்மா ஆகியவற்றுக்கு இடையே நல்லிணக்கத்தை வளர்ப்பதும் அவரது முக்கிய நோக்கங்களாகும்.

வேதாந்தத்தின் ஞானப் பார்வையின் வழியாக, கேள்விகளையும் தற்கால வாழ்க்கையில் எழும் சவால்களையும் ஆராய்ந்து தெளிவு பெறுதல்.

  • வாழ்வில் வேதாந்தம் (Living Vedānta):-

வேதாந்த உபதேசங்களை உணர்வுகள், உறவுகள், வாழ்க்கையின் சவால்கள் மற்றும் அன்றாட வாழ்வில் கடைப்பிடித்தல்.

  • தனிப்பட்ட வழிகாட்டுதல் (Personal Guidance):-

ஆசிரியர்களுடன் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடி, வழிகாட்டுதலையும் தெளிவையும் பெறுவதற்கான வாய்ப்புகள்.

  • குருகுல வாழ்க்கை முறை (Gurukula Living):-

கல்வி, பிரார்த்தனை, சேவை, சுயசிந்தனை மற்றும் சமூக வாழ்வு ஆகியவற்றை உள்ளடக்கிய எளிமையான அன்றாட வாழ்க்கை முறை.

தினசரி அட்டவணை

நேரம் நிகழ்ச்சி

காலை 5:30 ஆலய பூஜை

காலை 6:00 – 6:20 தேநீர்

காலை 6:30 – 7:00 தியானம்

காலை 7:00 – 8:00 கீதா சார தாலாட்டு

காலை 8:00 – 8:30 காலை உணவு

காலை 9:00 – 10:00 தத்துவ போதம்

காலை 10:00 – 10:15 சிறிய இடைவேளை

காலை 10:15 – 11:15 சம்ஸ்கிருதம் (அடிப்படை மற்றும் இடைநிலை)

காலை 11:15 – 11:25 தேநீர்

காலை 11:30 – மதியம் 12:30 மந்திர பாராயணம்

மதியம் 1:00 – 1:30 மதிய உணவு

மதியம் 1:30 – 3:00 ஓய்வு நேரம்

மாலை 3:30 – 4:30 யோகா

மாலை 4:30 – 5:00 தேநீர்

மாலை 5:30 – 6:00 திருக்கோயில் பிரார்த்தனை

மாலை 6:15 – 7:15 சத்சங்கம் (ஆன்மிகக் கலந்துரையாடல்)

இரவு 7:15 – 8:00 இரவு உணவு

இரவு 8:00 – 9:30 தனிப்பட்ட நேரம் (சிந்தனை / வீட்டுப்பாடம்)

இரவு 9:30 விளக்குகளை அணைத்தல்; உறங்கச் செல்லுதல்

 

தங்குமிட வசதிகள் மற்றும் உணவு:-

இணைக்கப்பட்ட குளியலறை மற்றும் சூரியசக்தி மூலம் சூடாக்கப்படும் வெந்நீர் வசதியுடன் கூடிய தனி அறைகள், இருவர் தங்கும் அறைகள் மற்றும் மூவர் தங்கும் பகிர்வு அறைகள் ஆகியவை வசதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மின்னஞ்சல் அனுப்புதல், குறுஞ்செய்தி பரிமாற்றம் போன்ற அத்தியாவசிய தனிப்பட்ட பயன்பாடுகளுக்காக, அறிவிக்கப்பட்ட நேரங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் ஆசிரமத்தின் வைஃபை (Wi-Fi) வசதி கிடைக்கும்.

பாதுகாப்பான, RO முறையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்.

சாத்வீகமான சைவ உணவு தினமும் மூன்று வேளையும் வழங்கப்படும்.

தேநீர் வசதி, தூய்மையான சுற்றுப்புறம் மற்றும் கவனத்துடன் கற்க ஏற்ற அமைதியான சூழல் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பயிற்சிக்குப் பங்களிப்புத் தொகை

(தமிழில் நடைபெறும் எங்களின் முதல் குடியிருப்பு வேதாந்த வகுப்பிற்கான சிறப்பு ஒருமுறை அறிமுகச் சலுகை)

தனி அறை வசதி: ₹20,000

இருவர் தங்கும் அறை வசதி: ஒருவருக்கு ₹15,000

மூவர் தங்கும் அறை வசதி: ஒருவருக்கு ₹11,000

மேற்கண்ட பங்களிப்புத் தொகையில் தங்குமிடம் மற்றும் உணவுக்கான செலவுகள் அடங்கும்.

குருகுல மரபைப் பின்பற்றி, அனைத்து ஆன்மிகப் போதனைகளும் கட்டணமின்றி வழங்கப்படுகின்றன. பொருளாதார வசதி இல்லாத காரணத்தால் எவரும் கற்கும் வாய்ப்பிலிருந்து விலக்கப்படுவதில்லை.

ஆசிரமத்தின் அன்றாடச் செயல்பாடுகளுக்குத் தேவையான செலவுகளை ஆதரிப்பதற்காக, விருப்பமுள்ளவர்கள் தன்னார்வ நன்கொடைகளை வழங்கலாம்.

மேலும், பாடநெறி நிறைவில், ஆசிரியர்களுக்கு நன்றியுணர்வின் வெளிப்பாடாக குரு தட்சிணை வழங்கவும் பங்கேற்பாளர்கள் விரும்பினால் வழங்கலாம்.

தொடங்கத் தயாரா?

மார்ச் 2027 – ஒரு மாத வேதாந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்.

விசாரணைகளுக்கு:

enquiries@purnavidya.org

ஒரு மாத காலம் வேதாந்தத்தைக் கற்றல், ஆழ்ந்து விசாரித்தல், சிந்தித்தல் மற்றும் குருகுல மரபில் வாழ்ந்து அனுபவித்தல் ஆகியவற்றுக்காக எங்களுடன் இணையுங்கள்.

Register Now